வாழ்க்கைக்கு போதுமான வருமானம்
முழுநேரவேலை செய்யும் ஒருவருக்கு வாழ்க்கைக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். சுவிஸ் போன்ற செல்வந்த நாட்டில் இந்த செய்முறை நடைமுறையில் இருக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது நடைமுறையில் இல்லை. குளோட்டனில் (Kloten) குறைந்தபட்ச ஊதியம் தேவை. அதனால் குறைந்தபட்ச ஊதியம் தேவை. குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைபடுத்த November 28 அன்று Klotenஇல் வாக்களிப்பு நடைபெறும் - உங்கள் வாக்குகள் கணக்கிடப்படும்.
குறைந்த ஊதியம் குடும்பத்துக்கு போதாமல் உள்ளது
அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்துவருகிறது சுகாதார காப்பீடு (Krankenkasse) வீட்டுவாடகை (Miete) உயரும்போது ஊதியம் அனைத்து கட்டணங்களும் (Rechnungen) செலுத்த இயலாது. சினிமா, விடுமுறை, உணவகத்துக்கு செல்வது இவர்களுக்கு கடினமானது. ஊதியங்கள் போதுமானதாக இல்லாததால், அதிகமான ஊழியர்கள் சராசரி ஊதியத்தை விட குறைந்த சம்பளத்தில் கூடிய நேரம் வேலை செய்கிறார்கள். முழு குடும்பமும் இதனால் பாதிக்கப்படுகிறது.
முக்கிமான வேலைக்கு சரியான ஊதியம் தேவை
கொரோனா நெருக்கடி காலத்தில் விற்பனை, சுத்தம், போக்கவரத்து ஊழியர்கள் நம்பமுடியாத அளவுக்கு முக்கிமானவர்களாக இருந்தனர். இது ஊதியத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.
குறைந்த ஊதியம் முதுமையில் வறுமைக்கு வழிவகுக்கும்
இளம் தொழுலாளர்களுக்கு மட்டும் குறைந்த ஊதியம் இல்லை. குறைந்த சம்பளத்தில் 2/3 பங்கு ஊழியர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். தொழில் வாழ்வின் நடுவில் நிற்கும் அவர்கள் நிறைய சாதிக்கும் அனுபவம் மிக்கவர்கள். இவர்கள் குறைந்த ஊதியத்தை, மட்டுமே பெற்றால் ஓய்வுக்குப் பின் முதுமையில் வறுமையை எதிர்கொள்வார்கள். அதை மாற்ற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்துடன் நல்ல அநுபவங்கள்
குறைந்தபட்ச ஊதியம் வேலை இழப்புக்கு வழிவகுக்காது. என்பதை சுவிற்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளின் அநுபவம் காட்டுகிறது. விமான நிலைய நகரங்களான பாசல் (Basel), ஜெனீவா (Genf) போல நொசற்றல் (Neuenburg), யூறா (Jura), ரெசின் (Tessin) நகரங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. வின்ரத்தூரிலும் சூரிச்சிலும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. November 28ல் குளோட்டனில் குறைந்தபட்ச ஊதியத்துக்கு நாமும் ஆம் என்று வாக்களிப்போம்.
November 28 ஆம் திகதி குளோட்டனில் குறைந்தபட்ச ஊதிய முயற்சிக்கு ஆம் என்று ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை நண்பர்களுக்கு தெரிவிக்கவும்: